மணக்கோலம் காணும் விநாயகப் பெருமான்

பிரம்மசாரியாகக் கொண்டாடப்படும் விநாயகப் பெருமான், சித்தி புத்தி எனும் இரு சக்திகளுடன் சில தலங்களில் காட்சி தருவார். ஆனால், அவருக்கு திருமணம் நடைபெறும் தலமாக தமிழகத்தில் உப்பூர் தலம் திகழ்கிறது.

வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் விநாயகருக்கு திருமணம் நடைபெறும். அதுபோல் தமிழகத்தில் நடைபெறும் தலம் உப்பூர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உப்பூர் தலம். இங்குள்ள வெயிலுகந்த விநாயகர் கோவில் புகழ்பெற்ற ஒன்று. உப்பூருக்கு வடமொழியில் லவனபுரம் என்று பெயர். லவனம் என்றால் தமிழில் உப்பு.

மேலும் படிக்க... மணக்கோலம் காணும் விநாயகப் பெருமான்

நவகிரகக்கோட்டை சுயம்பு விநாயகர்

பழைமையான ஆலயங்கள் மட்டுமல்லாது தற்காலத்தில் நவீன ஆலயங்கள் பல விநாயகப் பெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்தில் பொன்னை அருகே உள்ள நவசித்தி சுயம்பு விநாயகர் கோவில் புகழ்பெற்று வருகிறது. வேலூரில்- வள்ளிமலை அருகே பொன்னை என்ற ஊருக்கு 2 கி.மீ தொலைவில் ஒட்டனேரி கிராமம் உள்ளது. இங்கே விநாயகர் சுயம்பு உருவாக எழுந்தருளியுள்ளார்.

மேலும் படிக்க... நவகிரகக்கோட்டை சுயம்பு விநாயகர்

பெரியானை கணபதி!

திருக்கோயிலூரில் உள்ளது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இங்கே வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை அருள்கிறார் பெரியானை கணபதி.

மேலும் படிக்க... பெரியானை கணபதி!

விநாயகரே போற்றி!

விநாயகப் பெருமான் ஓங்கார வடிவானவர். அரச மரத்தடியில் அமர்ந்து, காட்சிக்கு எளியவராகத் திகழ்பவர். பிரார்த்திக்க நினைக்கும் அளவில், அதை நிறைவேற்றி அருள்பவர். வேண்டும் வரம் தரும் பெருமான். தேவரும் மூவரும் போற்றும் பிரான். சனீஸ்வரனே தன்னைப் பீடிக்க இயலாமற் செய்தவர். சனித்தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னங்களை… அதாவது தடைகளைக் களைபவர். அதனால் விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். கணங்களின் அதிபதி. அதனால் கணபதி, கணேசர் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார்.

மேலும் படிக்க... விநாயகரே போற்றி!

ஆடி அமாவாசையில் அகத்தியர் வழிபட்ட அய்யனார்!

பார்வதி, பரமேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் வடதிசை சென்றனர். எனவே அத்திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இரு திசைகளையும் சமமாக்க அகத்திய முனிவரை தென் திசை அனுப்பினார் ஈசன். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களுக்கும் சென்றார். அப்படி வரும்போது, ஓரிடத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது ஞானதிருஷ்டியில் அவர் ஜோதி தரிசனம் கண்டார். லோக மாதாவான பிரம்ம ராட்சசி, பேச்சி முதலியோர் பரமேஸ்வரரை பூஜிக்கும் காட்சி கண்டு நெகிழ்ந்தார். அன்றைய தினம் ஆடி அமாவாசையாகும். “”இன்றைய தினம் புலால், மதுவைத் தவிர்த்து இம்மூர்த்திகளை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் அருள வேண்டும்” என்று மலர் சொரிந்து வேண்டினார். அப்போது தேவர்களும் பூமாரி பொழிய, இறைவன் சொரிமுத்து அய்யனார் என்ற திருநாமம் பெற்றார்.

மேலும் படிக்க... ஆடி அமாவாசையில் அகத்தியர் வழிபட்ட அய்யனார்!

சுபிட்சம் தரும் சூரியனார் கோயில்கள்!

வேத காலம் முதலே, சூரிய மண்டலத் தில் உறையும் சூரிய நாராயணனாக வழிபடப்படுகிறார் சூரிய பகவான். ஆறு வகை சமயங்களில், சூரிய வழிபாட்டை மையமாகக் கொண்டது சௌர சமயம்.

பூமியில் உயிர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகத் திகழ்வது சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு எல்லாமும் தான்! சூரியனைப் போற்றும் விதத்தில்தான், ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் எனும் ஸ்தோத் திரத்தை அகத்தியர் உபதேசித்து அருளினார்.

சிவாலயங்கள் பலவற்றில், சூரிய பகவானுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். சூரியன் வணங்கி வழிபட்ட ஆலயங்களும் தோஷங்கள் தீர்க்கும் சூரிய தீர்த்தங்களும் தமிழகத்தில் பல உண்டு. குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத் திருமேனியில் சூரிய கிரணங்கள் விழும் தலங்களும் ஏராளம். ஆனால், சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்ட ஆலயங்கள் மிகக் குறைவு! தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் கொனார்க் ஆலயம் போல் குறிப்பிட்ட சில தலங்களே உள்ளன. அவற்றுள் சில…

மேலும் படிக்க... சுபிட்சம் தரும் சூரியனார் கோயில்கள்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமையப் பெற்றுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் சிற்றூர். இங்குள்ள கோயிலில் விநாயக பெருமான் கற்பக விநாயகராக குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மேலும் படிக்க... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்

தக்ஷிணாமூர்த்தி ஆலயங்கள் – Some Dakshinamurthy Temples

திருவலிதாயம் – பாடி:

குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம்நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார்.

மேலும் படிக்க... தக்ஷிணாமூர்த்தி ஆலயங்கள் – Some Dakshinamurthy Temples

பிற ஆலயங்கள்

முழுமுதற் கடவுளாக சைவ மார்க்கத்தில் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமான், சாஸ்தா கோவில் உள்ளிட்ட தெய்வங்களின் ஆலயங்கள் பற்றிய விவரம்…

மேலும் படிக்க... பிற ஆலயங்கள்
error: Content is protected !!