ஆழ்வார்திருநகரி

திருக்கோளூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் மேல் திசையில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். இது நவதிருப்பதிகளுள் ஒன்பதாவது திருப்பதி. நவக்கிரகங்களில் வியாழன் தலம்.

மூலவர் ஸ்ரீ ஆதிநாதப் பெருமான் கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்ஸவர் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் என போற்றி வணங்கப்படுகிறார். ஆதிநாதவல்லித் தாயாரும் குருகூர் வல்லித் தாயாரும் அருள்புரிகின்றனர். இங்கு தல விருட்சமாக புளியமரம் உள்ளது. ஐந்து அடுக்குகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. பிரம்மதீர்த்தம், திருச்சங்கன்னித்துறை ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.

மேலும் படிக்க... ஆழ்வார்திருநகரி

திருக்கோளூர்

தென்திருப்பேரையிலிருந்து தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. நவதிருப்பதியில் எட்டாவது திவ்யதேசம். நவகிரகங்களில் செவ்வாய்த் தலமாக விளங்குகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் அவதரித்த தலம் இதுவேயாகும்.

பார்வதியின் சாபத்தால் குபேரன் தனது நவநிதிகளையும் இழந்தான். மேலும் உருவமும் விகாரம் அடையப் பெற்றான். குபேரன் பார்வதி தேவியை அடிபணிந்து சாப விமோசனம் வேண்டினான்.

மேலும் படிக்க... திருக்கோளூர்

தென்திருப்பேரை

பெருங்குளத்தில் இருந்து தெற்கே சுமார் 11 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் தென் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். நவதிருப்பதியில் 7வது திருப்பதி. இது ஒரு சுக்கிர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

மூலவர் மகர நெடுங்குழைக் காதர் (நிகரில்முகில்வண்ணன்). பத்ர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமான். குழைக்காதவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என, தாயார்கள் அருள் புரிகின்றனர். சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம் என்ற இரு தீர்த்தங்கள் உள்ளன.

மேலும் படிக்க... தென்திருப்பேரை

திருக்குளந்தை (பெருங்குளம்)

இரட்டைத் துலைவில்லிமங்கலத்துக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் தாமிரபரணியின வடகரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். அருகே பெரியகுளம் ஒன்றும் உள்ளது. சனிக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி.

ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமான். திருவேங்கடமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

மேலும் படிக்க... திருக்குளந்தை (பெருங்குளம்)

திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திருப்புளியங்குடிக்கு தென்கிழக்கே சுமார் 7கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது. இரண்டு திருத்தலங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. நவதிருப்பதிகளுன் நான்கு மற்றும் ஐந்தாவது திருப்பதி. நவகிரகங்களுள் ராகு, கேதுவுக்கு உரிய தலங்களாக உள்ளன.

இங்கே பெருமான் குமுத விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். நின்றகோலத்தில் மார்பில் லட்சுமி வீற்றிருக்க, ஸ்ரீனிவாசனாக தேவபிரான் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கே தனியாக தாயாருக்கு சந்நிதி இல்லை. தீர்த்தம் – வருண தீர்த்தம்.

மேலும் படிக்க... திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திருப்புளியங்குடி

ஸ்ரீ வரகுணமங்கை தலத்தில் இருந்து கிழக்கே 1கி.மீ தொலைவில் உள்ளது. நவதிருப்பதி தலங்களில் மூன்றாவது திருப்பதி. இங்கு எம்பெருமான் காய்சினவேந்தன் என்ற திருநாமத்தில் திகழ்கிறார். புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய கோலத்தில் வேதசார விமானத்தின் (ச்ருதிஸாரசேகர விமானம்) கீழ் காட்சி தருகிறார்.

பெருமானின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக் கொடியில் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார். பிராகார வலம் வரும்போது, வடபுறத்தில் இருக்கும் ஜன்னலின் வழியே பெருமானின் திருமுடி முதல் திருவடி வரை நாம் முழுமையும் தரிசிக்கலாம். தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடிவல்லித் தாயார் ஆகியோர்.

மேலும் படிக்க... திருப்புளியங்குடி

ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் உள்ளது. நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. மூலவர் விஜயாசனப் பெருமாள். விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்கிறார். ஆதிசேஷன் குடைபிடிக்க, கிழக்கு நோக்கி, வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

தாயார்: வரகுணமங்கைத் தாயார், வரகுணவல்லித் தாயார். நம்மாழ்வார் தனது இடர்களை களைவதற்கு எம்பெருமானை வேண்டியபடி, எம்இடர்கடிவான் என அழைத்தார். எனவே, உற்ஸவருக்கு எம்இடர்கடிவான் எனப்பெயர்.

தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி ஆகியவை. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம். ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிக அழகு. காளிங்கநர்த்தனர், தசாவதார சிற்பங்கள் கண்களைக் கவர்வன.

மேலும் படிக்க... ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

ஸ்ரீ வைகுண்டம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள தலம். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதி. நவகிரகங்களில் சூரியன் தலம். இந்திர விமானத்தின் கீழ் பெருமான் எழுந்தருள்கிறார். மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தருகிறார். நான்கு கரங்கள், மார்பில் மகாலட்சுமியுடன் உபய நாச்சிமார் இன்றி காட்சி தருகிறார்.

உற்ஸவர் ஸ்ரீ சோரநாதர் (ஸ்ரீ கள்ளபிரான்), ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருகில் ஸ்ரீவைகுண்ட நாச்சியார், ஸ்ரீ சோரநாத நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். தல விருட்சம்- பவளமல்லி. இங்கு பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம், தாமிரபரணி ஆகிய தீர்த்தங்கள் உள்ளது. 9 நிலையுடன் கூடிய 110 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

மேலும் படிக்க... ஸ்ரீ வைகுண்டம்

நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தில் அமைந்துள்ளது நயா திருப்பதி என்னும் புண்ணியத் தலம். இதன் அருகில் சிம்மகிரி மலையடிவாரத்தில் “நவகிரக நவ நரசிம்மர் பீடம்’ உள்ளது. மலை உச்சியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி ஸ்ரீநரசிம்ம முக வடிவமைப்புடன் கூடிய நுழைவு வாயிலுடன் வித்தியாசமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க... நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!

சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.

மேலும் படிக்க... சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!
error: Content is protected !!