சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.

மேலும் படிக்க... சிதிலமடைந்த திருவெண்காடர் ஆலயம்!

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். நமஸ்தே…

மேலும் படிக்க... வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

பலன்தரும் பரிகாரத் தலம்: ஆயுளை நீட்டிக்கும் அண்ணன் பெருமாள்!

திருவெள்ளக்குளம்… இதுவே “அண்ணன் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் திருக்கடையூர்-பூம்புகார் பாதையில் உள்ளது இந்தத் தலம்.

திருநாங்கூரின் பதினோரு திருப்பதிகளில் ஒன்று. தென்திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது. மூலவர் ஸ்ரீனிவாசப் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்-அலர்மேல்மங்கை. உற்ஸவர் பத்மாவதி. தீர்த்தம்- திருவெள்ளக்குளம் என்கிற ஸ்வேத புஷ்கரணி. விமானம்-ஸ்வேத விமானம்.

மேலும் படிக்க... பலன்தரும் பரிகாரத் தலம்: ஆயுளை நீட்டிக்கும் அண்ணன் பெருமாள்!

மணக்கோலம் காணும் விநாயகப் பெருமான்

பிரம்மசாரியாகக் கொண்டாடப்படும் விநாயகப் பெருமான், சித்தி புத்தி எனும் இரு சக்திகளுடன் சில தலங்களில் காட்சி தருவார். ஆனால், அவருக்கு திருமணம் நடைபெறும் தலமாக தமிழகத்தில் உப்பூர் தலம் திகழ்கிறது.

வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் விநாயகருக்கு திருமணம் நடைபெறும். அதுபோல் தமிழகத்தில் நடைபெறும் தலம் உப்பூர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உப்பூர் தலம். இங்குள்ள வெயிலுகந்த விநாயகர் கோவில் புகழ்பெற்ற ஒன்று. உப்பூருக்கு வடமொழியில் லவனபுரம் என்று பெயர். லவனம் என்றால் தமிழில் உப்பு.

மேலும் படிக்க... மணக்கோலம் காணும் விநாயகப் பெருமான்

நவகிரகக்கோட்டை சுயம்பு விநாயகர்

பழைமையான ஆலயங்கள் மட்டுமல்லாது தற்காலத்தில் நவீன ஆலயங்கள் பல விநாயகப் பெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்தில் பொன்னை அருகே உள்ள நவசித்தி சுயம்பு விநாயகர் கோவில் புகழ்பெற்று வருகிறது. வேலூரில்- வள்ளிமலை அருகே பொன்னை என்ற ஊருக்கு 2 கி.மீ தொலைவில் ஒட்டனேரி கிராமம் உள்ளது. இங்கே விநாயகர் சுயம்பு உருவாக எழுந்தருளியுள்ளார்.

மேலும் படிக்க... நவகிரகக்கோட்டை சுயம்பு விநாயகர்

பெரியானை கணபதி!

திருக்கோயிலூரில் உள்ளது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இங்கே வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை அருள்கிறார் பெரியானை கணபதி.

மேலும் படிக்க... பெரியானை கணபதி!

விநாயகரே போற்றி!

விநாயகப் பெருமான் ஓங்கார வடிவானவர். அரச மரத்தடியில் அமர்ந்து, காட்சிக்கு எளியவராகத் திகழ்பவர். பிரார்த்திக்க நினைக்கும் அளவில், அதை நிறைவேற்றி அருள்பவர். வேண்டும் வரம் தரும் பெருமான். தேவரும் மூவரும் போற்றும் பிரான். சனீஸ்வரனே தன்னைப் பீடிக்க இயலாமற் செய்தவர். சனித்தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னங்களை… அதாவது தடைகளைக் களைபவர். அதனால் விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். கணங்களின் அதிபதி. அதனால் கணபதி, கணேசர் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார்.

மேலும் படிக்க... விநாயகரே போற்றி!
error: Content is protected !!