ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை!

[caption id="attachment_876" align="alignnone" width=""]காவேரி அம்மை: அம்மா மண்டபம்காவேரி அம்மை: அம்மா மண்டபம்[/caption]

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரிதான். ஆனால், ஆடி 18ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழாவானது பெரும்பாலும் எல்லா நதி தீரங்களிலும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளைப் போற்ற வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

அரைத்த மஞ்சளை ஒரு செம்பு நீரில் கலந்து, அதை ஆற்று நீரில் கரைத்து, செம்பில் ஆற்று நீர் எடுத்து வந்து விளக்கு பூஜை செய்வர். மேலும், ஆற்றின் படித்துறையில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ச்சியோடு திரும்புவர்.

மேலும் படிக்க... ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை!

ஆடி அமாவாசையில் அகத்தியர் வழிபட்ட அய்யனார்!

பார்வதி, பரமேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் வடதிசை சென்றனர். எனவே அத்திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இரு திசைகளையும் சமமாக்க அகத்திய முனிவரை தென் திசை அனுப்பினார் ஈசன். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களுக்கும் சென்றார். அப்படி வரும்போது, ஓரிடத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது ஞானதிருஷ்டியில் அவர் ஜோதி தரிசனம் கண்டார். லோக மாதாவான பிரம்ம ராட்சசி, பேச்சி முதலியோர் பரமேஸ்வரரை பூஜிக்கும் காட்சி கண்டு நெகிழ்ந்தார். அன்றைய தினம் ஆடி அமாவாசையாகும். “”இன்றைய தினம் புலால், மதுவைத் தவிர்த்து இம்மூர்த்திகளை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் அருள வேண்டும்” என்று மலர் சொரிந்து வேண்டினார். அப்போது தேவர்களும் பூமாரி பொழிய, இறைவன் சொரிமுத்து அய்யனார் என்ற திருநாமம் பெற்றார்.

மேலும் படிக்க... ஆடி அமாவாசையில் அகத்தியர் வழிபட்ட அய்யனார்!

வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா.

குறிப்பிட்ட நீள – அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

மேலும் படிக்க... வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

திருவையாற்றில் திருக்கயிலை!

தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. “சோழ நாடு சோறுடைத்து’ என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல,

விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார்.

ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.

மேலும் படிக்க... திருவையாற்றில் திருக்கயிலை!

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

[caption id="attachment_868" align="alignright" width=""]ஆண்டாள்ஆண்டாள்[/caption]ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீதடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்’

வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள சுலோகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக “வைகுண்டம்கூட வேண்டாம்” என்று முடிவு செய்த திருமால், திருமலையில் சுவாமி புஷ்கரணி என்கிற குளத்தின் கரையில் எழுந்தருளினார் என்பது இதன் பொருள். அதேபோல் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தேவியான பூமிப்பிராட்டி, “வைகுண்ட வான்போகம்கூட வேண்டாம்’ என்று பெரியாழ்வாரின் திருமகளாய், ஸ்ரீஆண்டாளாய், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள் என்பார் மணவாள மாமுனிகள்.

கலியுகாப்தம். நள வருடம், ஆடி மாதம், எட்டாம் தேதி, வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று, பூர நட்சத்திரத்தில், துலா லக்னத்தில் அவதரித்தாள் ஆண்டாள். தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி, பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்.

மேலும் படிக்க... ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!

வேதம் வகுத்த வியாசர்!

சந்திரனின் இயக்கத்தை வைத்துக் கணக்கிடப்படும் காலக் கணக்கு “சாந்திரமானம்’ முறை எனப்படுகிறது. அதன்படி இன்றைய (15.7.2011) பௌர்ணமி தினம் ஒரு புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த தினம் வியாச பூர்ணிமா என்றும், குரு பூர்ணிமா என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. தென்னாட்டில் இந்நன்னாளை “வியாஸ பூஜை’ என்கிறார்கள்.

மழை பொழிந்தால் பின்னாளில் கோடை வரும். அந்த வகையில் வேதம் மிகவும் நன்றாக ஒரு காலத்தில் இருந்தால், கொஞ்சம் மங்கியிருக்கும் காலமும் உண்டு. அச் சமயத்தில் இறைவனால் சொல்லப்பட்ட வேதத்தை ரட்சிக்க வேண்டும். என்ன செய்வது? வியாச ரிஷி ஒரு நாள் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

“”கலியுகத்தில் மனிதனுடைய ஆயுள், அறிவாற்றல், வேத கர்மங்களில் ஈடுபடும் எண்ணம் முதலியவை குறைந்துவிடும். உலகில் அதர்ம இருள் பரவும். எனவே வேதத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்பது அவருக்கு விளங்கியது. ஆல் போல் தழைத்து விரிந்த வேதத்தைப் பயில்வது, ஆற்றல் குறைந்த வேதியர்களுக்குக் கடினமாகி விடும்; ஆகவே வேதத்தை எளிதில் பயிலும் வகையில் நான்காகப் பிரித்தார் வியாச பகவான். நமது சநாதன தர்மத்தையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து பயன்படும்படிச் செய்தார் அந்த மகான். காதினாலே கேட்டு, வாக்கினாலே ஸ்வரத்தோடு பாராயணம் செய்து, பரம்பரை பரம்பரையாக வேதம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் நீண்ட வேதத்தை எளிமையாக்கினார் வியாசர்.

மேலும் படிக்க... வேதம் வகுத்த வியாசர்!

“ஆடி’யில் தேடி …

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம். தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்’ என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது.

மேலும் படிக்க... “ஆடி’யில் தேடி …

அழகென்ற சொல்லுக்கு முருகா!

தமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

மேலும் படிக்க... அழகென்ற சொல்லுக்கு முருகா!

ஆனைக்கு அருளிய ஆதிமூலம்! – நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்!

[caption id="attachment_861" align="alignnone" width=""]நத்தம் ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள்ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள்[/caption]

மூலமே என்ற கரிமுன் வந்திடர் தொலைந்து

நீலமேகம் போல நின்றானை -பாலாய

வேலை நடுவில் துயிலும் வித்தகனை வேங்கடத்து

மாலையன்றிப் பாடாதென் வாய்.

(அஷ்டப்பிரபந்தம்- திருவேங்கடமாலை-காப்புச் செய்யுள்)

முதலையின் வாயில் அகப்பட்ட யானை, தன்னைக் காக்குமாறு ஆதிமூலமே என்று அலறி அழைக்க, அதன் வருத்தத்தை நீக்கி அருள் செய்தார் திருமால். இவ்வாறு ஆனைக்கு அருள்புரிந்த தலங்கள் தமிழகத்தில் அனேகம். அவற்றில் மிகச் சிறப்புடன் திகழ்கிறது நத்தம் எனும் தலம். இங்கே, பெருமான் சயனக் கோலத்தில், ஆனைக்கு அருள்புரிந்தவராகக் காட்சி அளிப்பது மிகவும் சிறப்பான ஒன்று.

மேலும் படிக்க... ஆனைக்கு அருளிய ஆதிமூலம்! – நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்!

பாலையில் உதித்த பாலீஸ்வரர்!

பாலீஸ்வரர்

சென்னையிலிருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் பொன்னேரிக்கு அருகே 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாலைவனம். “எங்கும் நிறைந்தவன் இறைவன்’ என்பதற்கு இத்தலத்தில் எழுந்தருள் இருக்கும் திருப்பாலீஸ்வரரே சான்றாக விளங்குகிறார்.

சுயம்புவாகத் தோன்றினார்!: முதலாம் ராஜேந்திர சோழன் தனது படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டினான். அவன் வெற்றிக் களிப்பில் திரும்பிக்கொண்டிருந்தபோது அயர்ச்சியின் மிகுதியால் ஓய்வெடுக்க எண்ணினான். வழியில் இருந்த பாலைமரக் காட்டில் தங்கினான்.

அப்போது ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த அவனது யானை திடீரென மூர்ச்சையானது. அரசனோ அதிர்ந்தான். யானை கட்டப்பட்டிருந்த மரம் பாலை மரம் என்பதை அறிந்தான். அந்த மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கருதி மரத்தை வெட்ட ஆணையிட்டான். அவனுடைய வீரர்கள் கோடரியால் மரத்தை வெட்ட, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளிவந்தது. திகைத்த ராஜேந்திர சோழன், வெட்டுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு மரத்தின் அடிபாகத்தை ஆழ்ந்து நோக்கினான். அங்கே ஒரு லிங்கம் காட்சியளித்தது. அந்த சுயம்பு லிங்கத்தைக் கண்டு மன்னன் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான். அங்கே ஒரு கோயிலையும் எழுப்பினான். அடர்ந்த பாலைமரக் காட்டில் தோன்றியதால் இறைவன் திருப்பாலீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.

மேலும் படிக்க... பாலையில் உதித்த பாலீஸ்வரர்!
error: Content is protected !!