நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருவாலி – திருநகரி என்கிற தலம். சீர்காழி- திருவெண்காடு- பூம்புகார் வழித்தடத்தில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் தலம் லஷ்மிபுரம், ஸ்ரீநகரி, ஆலிங்கனபுரம், பில்வாரண்யக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் நரசிம்மர். இவர் லெஷ்மி நரசிம்மர், வேதராஜன், வயலாலி மணவாளன் என்ற திருநாமங்களாலும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருநாமம் அம்ருதவல்லித் தாயார்.

மேலும் படிக்க... நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

திருவாழியாழ்வான் ஜெயந்தி!

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சக்கரத்தானை “திருவாழியாழ்வான்’ என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு “ஹேதிராஜன்’ என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்றுகிறார். அதாவது “திருமாலுக்கு இணையானவர்’ என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை “”வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று வாழ்த்துகிறார். “”சக்கரத்துடன் இணைந்தவரே திருமால்” என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு “”சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.

மேலும் படிக்க... திருவாழியாழ்வான் ஜெயந்தி!

ஆடலரசுக்கு ஆனித்திருமஞ்சனம்!

பிரபஞ்சத்தின் இயக்கமே சிதம்பரம் ஆடல்வல்லானின் ஆனந்தத் தாண்டவத்தில் அரங்கேறுகிறது. உலகில் உயிர்கள் செழிக்க வேண்டி, இன்புற வேண்டி ஞானக்கடலாகத் திகழும் சிவபெருமான் தில்லை திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தமாகக் கூத்தாடுகிறார். அண்ட சராசரங்கள் அனைத்தும் இன்புறுவதற்காக அந்தத் தாண்டவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தத்துவப் பெட்டகமாகத் திகழும் தில்லையில் பொன்னம்பலக் கூத்தன் பொலிவுடன் ஆடுகிறான்.

எல்லா யுகங்களிலும்…

மேலும் படிக்க... ஆடலரசுக்கு ஆனித்திருமஞ்சனம்!

அபிராமி அந்தாதி படித்தால்…!

அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.

“தனம் தரும்’ என்ற பாட்டில் அபிராமி தேவி அன்பர்களுக்கு “நல்லன எல்லாம் தரும்’ என்று மொழிந்து, விரிவாகப் பாடிய அபிராமி பட்டர், “நூற்பயன்’ பாட்டில் ரத்னச் சுருக்கமாக அருளியுள்ளார். அபிராமி தேவியை வழிபடுவார்க்கு ஒரு துன்பமும் வராது என்று உறுதியுடன் கூறுகிறார். “”முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க... அபிராமி அந்தாதி படித்தால்…!

அரசர்கள் போற்றித் தொழுத அரசர்கோவில்

[caption id="attachment_834" align="alignleft" width=""]அரசர்கோயில்அரசர்கோயில்[/caption]

செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் பயணித்து, படாளம் ரயில்வே கேட்டிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் வருகிறது அரசர் கோயில். இதற்கு சற்று முன்னால் புலிப்புரக் கோயில் என்ற கிராமம். பாலகுஜாம்பிகை சமேத வியாக்ரபுரீஸ்வரர் கோயில். வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிக்கு சிவபிரான் தரிசனம் வழங்கிய வடபொன்னம்பலக் கோயில் என்கிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசநாராயண சம்புவராயரின் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றிய பல செய்திகளைச் சொல்லுகிறது.

மேலும் படிக்க... அரசர்கள் போற்றித் தொழுத அரசர்கோவில்

இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்!

பள்ளிக்குழந்தைகள் தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிக்கு உடன் வருமாறு சொன்னார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர். சென்றேன் குழந்தைகளைப் பாராட்டிப் பேசி உற்சாகப்படுத்தினார் அவர். தொடர்ந்து நடந்த நடன நிகழ்ச்சிகளை எல்லோரும் ரசித்தார்கள். பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி.

மேலும் படிக்க... இலக்கியம் : உடல் மெலிவும், உடல் பொலிவும்!
error: Content is protected !!