திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில். இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க... திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருமலையில் ஹனுமன் ஜயந்தி

திருப்பதி, மே 27: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ஹனுமன் ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க... திருமலையில் ஹனுமன் ஜயந்தி

காக்கும் கால பைரவர்!

இன்றைய சமுதாயச் சீர்கேட்டிற்குக் காரணம், தனி மனித ஒழுக்கம் எல்லா வகையிலும் சீரழிந்துவிட்டதுதான். உலகச் சூழலில் ஏற்படும் பூகம்பம், சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகள், வன்முறைகள், அரசாங்கத்தில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிகள், பண வீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், எல்லா வகையான வாகனப் போக்குவரத்து விபத்துக்களுக்கும் இதுவே காரணம். மாயையில் அகப்பட்டு, பஞ்சமா பாதகங்களைச் செய்து பெரும் பாவத்திற்கு எல்லோரும் ஆளாகிறார்கள்.

ஒரு தனி மனிதனின் ஒழுக்கம், குணம், தீய செயல்களைச் செய்தல் போன்றவைகளை நிர்ணயம் செய்வது அவன் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தமேயாகும். இது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள ஒன்று. ஆகவே ரத்த உற்பத்தியைக் கொடுக்கும் வகையில் நாம் உண்ணும் உணவை மிக மிக முக்கியமானதாகக் கூறிவந்தார்கள்.

இந்த ஜென்மத்தில் நாம் அடையும் பல கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம் நான், எனது என்னும் கர்வம், ஆணவம் மற்றும் பூர்வ ஜென்ம பாவங்களின் கர்ம வினைகள்தாம். இந்த கர்வத்தை, ஆணவத்தை அடக்கி அவை மீண்டும் குடிகொள்ளாமல் இருக்க சிவபெருமான் எடுத்த அவதாரமே “ஸ்ரீ காலபைரவர்’. ஞானத்தையும், நன்னெறியும் காட்டுபவர் பைரவர் என்று “விஞ்ஞான பைரவம்’ என்ற நூல் கூறுகிறது. பொதுவாக பைரவர் அஷ்டமா சித்திகளைக் கொடுப்பவர்.

மேலும் படிக்க... காக்கும் கால பைரவர்!

ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

[caption id="attachment_827" align="alignleft" width=""]sri bhairavarஸ்ரீபைரவர்[/caption]உயிர்கள் எல்லாவற்றிற்கும் சகல செல்வங்களைத் தந்து அவற்றின் மூலம் இன்பத்தையும் அனுபவிக்கச் செய்யும் தெய்வமாகத் திகழ்பவர் சௌபாக்ய பைரவர். இவர் கொலு வீற்றிருக்குமிடம் கற்பகச் சோலைகளுக்கு இடையே அமைந்துள்ள பொங்கு பூம்புனல் ஊற்றுக்கு நடுவில் உள்ளதான மகராலயமாகும்.

மகரங்களால் தாங்கப்படும் பொன் மயமான கோட்டையில் சகல பரிவாரங்களுடன் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். தூய வெண்ணிறமான குதிரையை வாகனமாகவும், இரட்டை மீன் பொறித்த கொடிகளை உடையவராகவும், மச்சமுத்திரை தாங்கியவராகவும் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பொன் வண்ணத்துடன், பளபளப்பாக அழகிய அகன்ற கண்களைக் கொண்ட மீன், கடலின் உள்ளே மறைந்திருக்கும் பெருஞ் செல்வத்தின் அடையாளமாகும்.

கடலின் அடியாழத்தில் மகரம் எனப்படும் ஆற்றல் பொருந்திய மீன்கள் வாழ்கின்றன. செல்வத்திற்கு அவை காவல் தெய்வங்களாக உள்ளன.

மேலும் படிக்க... ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

திருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா

திருப்பதி, மே 23: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலும், வனப்பகுதியில் இறங்கு வழிச்…

மேலும் படிக்க... திருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா

ஆன்மீகக் கவிதை 01

வித்தில் எண்ணெயும் பாலில் வெண்ணெயும் மரத்தின் மறை நெருப்புமாய் மனிதனுள் ஒளியாய் கடவுள்… பூ மனத்தால் புனித தவத்தால் தன்னுள் உணரலாம் தன்னிகரற்றவனை. ஆன்ம தவத்தால் அறியலாம் அவனை…

மேலும் படிக்க... ஆன்மீகக் கவிதை 01

சுபிட்சம் தரும் சூரியனார் கோயில்கள்!

வேத காலம் முதலே, சூரிய மண்டலத் தில் உறையும் சூரிய நாராயணனாக வழிபடப்படுகிறார் சூரிய பகவான். ஆறு வகை சமயங்களில், சூரிய வழிபாட்டை மையமாகக் கொண்டது சௌர சமயம்.

பூமியில் உயிர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகத் திகழ்வது சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு எல்லாமும் தான்! சூரியனைப் போற்றும் விதத்தில்தான், ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் எனும் ஸ்தோத் திரத்தை அகத்தியர் உபதேசித்து அருளினார்.

சிவாலயங்கள் பலவற்றில், சூரிய பகவானுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். சூரியன் வணங்கி வழிபட்ட ஆலயங்களும் தோஷங்கள் தீர்க்கும் சூரிய தீர்த்தங்களும் தமிழகத்தில் பல உண்டு. குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத் திருமேனியில் சூரிய கிரணங்கள் விழும் தலங்களும் ஏராளம். ஆனால், சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்ட ஆலயங்கள் மிகக் குறைவு! தமிழகத்தில் சூரியனார் கோயில், ஒரிசாவில் கொனார்க் ஆலயம் போல் குறிப்பிட்ட சில தலங்களே உள்ளன. அவற்றுள் சில…

மேலும் படிக்க... சுபிட்சம் தரும் சூரியனார் கோயில்கள்!

திருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து

திருப்பதி,மே 23: திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள அதிக எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாக (பல்க் புக்கிங்) பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... திருமலையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்த கட்டண சேவை டிக்கெட்டுகள் ரத்து

சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்

திருப்பதி,மே 22: திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது.முதல் நாள் மதியம் 2 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி மற்றும்…

மேலும் படிக்க... சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேஸ்வரர் : பிரம்மோற்ஸவம்

ஞான நூல் காத்த ‘மீன’ நாராயணன்!

நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான் மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை.

காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! புகழ் பெற்ற “தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.

“ஏன் பகவான் மீன ரூபத்தில் முதலில் தோன்றினார்?’ என்று ஆராயுமிடத்து நாம் அறிவது, சிருஷ்டியின் பரிணாம வளர்ச்சியின்படி உயிர் தொடக்கம் நீரில்தான்! பிராணி சாஸ்திரப்படியும் தாய் மீன், தன் கண் பார்வையினாலேயே பெற்ற குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது. யுக ஆரம்பத்தில் உயிர்கள் “ஸ்வரூப ஞானம்’ பெற்றுய்யக் கண்களாலேயே தயை செய்து காப்பாற்றவே மத்ஸ்யாவதாரம் எடுத்தார் மாதவன்.

மேலும் படிக்க... ஞான நூல் காத்த ‘மீன’ நாராயணன்!
error: Content is protected !!