திருமாலிருஞ்சோலை – அழகர்மலைக்கு கள்ளழகர் எழுந்தருளல்

[caption id="attachment_749" align="alignright" width=""]தசாவதார தரிசனத்தில்...தசாவதார தரிசனம்[/caption]

மதுரை, ஏப். 21: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், தசாவதாரம் நிறைவுற்ற நிலையில் வியாழக்கிழமை இன்று அழகர்மலைக்கு எழுந்தருள்கிறார்.

ராமராயர் மண்டகப்படியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கிய சுந்தரராஜப் பெருமாளின் தசாவதார நிகழ்ச்சி, புதன்கிழமை காலை வரை நடைபெற்றது. முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராமர், கிருஷ்ணர், மோகன அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பெருமாள்.

மேலும் படிக்க... திருமாலிருஞ்சோலை – அழகர்மலைக்கு கள்ளழகர் எழுந்தருளல்

அதிசயங்கள்(Miracle)

இதிகாச புராணங்களில் பலவித அதிசயங்கள் நிகழ்ந்ததை படித்திருக்கிறோம். பகவான், தேவதைகள் தவிர ரிஷிகள் தங்கள் தவ வலிமையால் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு இணையாக பதிவ்ரதா •ஸ்த்ரீகள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இவை அனைத்தும் முதல் மூன்று யுகங்களோடு சரி. கலியுகத்தில் இதற்கு தொடர்ச்சி கிடையாது.

மேலும் படிக்க... அதிசயங்கள்(Miracle)

வாரத்தில் 5 நாள் லகு தரிசனம்: திருமலை கோயில் நிர்வாகம் ஆலோசனை

திருப்பதி, ஏப்.19: திருமலையில் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாள் லகு தரிசன முறையை நடைமுறைபடுத்த திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக முதன்மை செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

திருமலையில் தற்போது வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் லகு தரிசனம் எனப்படும் சுவாமியை அருகிலிருந்து வழிபடும் முறை நடைமுறையில் உள்ளது….

மேலும் படிக்க... வாரத்தில் 5 நாள் லகு தரிசனம்: திருமலை கோயில் நிர்வாகம் ஆலோசனை

மதுரையில் கள்ளழகரின் தசாவதார ஸேவை

[caption id="attachment_744" align="alignnone" width=""]சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் செவ்வாய்க்கிழமை காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் முன் சேஷ வாகனத்தில் காட்சியளித்த அருள்மிகு கள்ளழகர். மதுரையில் கள்ளழகர் ஸேவை[/caption]

மதுரை, ஏப். 19: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்றது.

மேலும் படிக்க... மதுரையில் கள்ளழகரின் தசாவதார ஸேவை

கள்ளழகர் உடுத்திய பட்டின் நிறம்…

பச்சைப் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சி தந்த கள்ளழகர்மதுரை, ஏப். 18: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது அணிந்திருந்த பட்டின் நிறம் குறித்து பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பார். அப்போது அவரது கால், கை வெள்ளை நிற ஆடையால் மூடப்பட்டிருக்கும். அவர் அமர்ந்து சாய்ந்திருக்கும் பகுதி பச்சைப் பட்டால் சாத்தப்பட்டிருக்கும்.

ஆகவே, கள்ளழகர் அமர்ந்து சாய்ந்த பகுதியில் சாத்தப்பட்டுள்ள பட்டின் நிறத்தையே இதுவரை அவர் உடுத்தியிருக்கும் பட்டாக மக்கள் கூறி வருகின்றனர். இதையே பச்சைப் பட்டு உடுத்தி வந்தார் என ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் வர்ணிக்கின்றன.

மேலும் படிக்க... கள்ளழகர் உடுத்திய பட்டின் நிறம்…

பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

[caption id="attachment_738" align="alignleft" width=""]வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்[/caption]

மதுரை, ஏப். 18: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர் பச்சைப் பட்டுடன் மதுரை வைகை ஆற்றில் புதிய தங்கக்குதிரை வாகனத்தில் திங்கள்கிழமை காலை இறங்கினார். ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க... பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

கள்ளழகர் நாளை திங்கள் கிழமை ஆற்றில் இறங்குகிறார்

மதுரை, ஏப். 16: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஏப். 18) காலை, மதுரை வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலையில் அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்பட்டார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றுமாவடியில் எதிர்சேவை எனப்படும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் படிக்க... கள்ளழகர் நாளை திங்கள் கிழமை ஆற்றில் இறங்குகிறார்

ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

மதுரை, ஏப். 16: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மதுரையில் சனிக்கிழமை காலை, மேளதாளத்துடன், வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.

மேலும் படிக்க... ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி வழிபாடு

திருவண்ணாமலை, ஏப். 15: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமி வழிபாடு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக கோயில் இணை ஆணையர் பி.தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேலும் படிக்க... அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி வழிபாடு

ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம்

சிதம்பரம், ஏப். 16: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் எழுத்தனர்.

மேலும் படிக்க... ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம்
error: Content is protected !!