நல்ல குழந்தைகள் பிறக்க “வாரணம் ஆயிரம்!’

கடந்த வெள்ளிக்கிழமையன்று சுசித்ராவின் “ஆண்டாள் திருக்கல்யாணம்’ இன்னிசை ஆன்மிகச் சொற்பொழிவு கிருஷ்ண கான சபை அரங்கத்தில் நடைபெற்றது. சிறந்த பாடல்களின் இசையோடு, திருவில்லிபுத்தூர் ஆண்டாளின் வாழ்க்கையையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இந்நிகழ்ச்சியின் தொகுப்பு:

மேலும் படிக்க... நல்ல குழந்தைகள் பிறக்க “வாரணம் ஆயிரம்!’

நலன்களை அருளும் நவகிரக விநாயகர்

இந்து சமயத்தில் சைவ நெறியும், வைணவ நெறியும் ஆன்மிகத்தின் இரு கண்களாக உள்ளன. இவை இரண்டும் இணைந்த தலமாகத் திகழ்வது “ஸ்ரீ அம்ருதபுரி’ என்கிற ஸ்ரீராமானுஜ யோகவனம். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது கூர்ம அவதாரம் எடுத்து, “அமுதம்’ வெளிப்படக் காரணமாய் இருந்தவர் திருமால்.

மேலும் படிக்க... நலன்களை அருளும் நவகிரக விநாயகர்

சந்தோஷம் தரும் சந்தோஷிமாதா

விநாயகப் பெருமான், “பிரம்மச்சாரி’ என்று போற்றப்பட்டாலும், அவருக்கு சித்தி, புத்தி என்ற இரு மனைவியர்கள் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சித்தி, புத்தி சமேத விநாயகரை பல ஆலயங்களிலும் தரிசிக்க முடிகிறது. தமிழகத்தில், திருச்சி மலைக் கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்குப் படியேறி செல்வதற்கான முதல் நுழைவாயில் அருகில், ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த சந்நிதி முகப்பில், விநாயகர் நடுநாயகமாகத் தனித்தும், அதற்குப் பக்கத்தில் சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

மேலும் படிக்க... சந்தோஷம் தரும் சந்தோஷிமாதா

சொல்லின் செல்வன்…

ஐந்து மதம் சிலரை “சிரஞ்ஜீவிகள்’ என்று வர்ணிக்கின்றது. இவர்களுக்கு அழிவென்பதே கிடையாது. அத்தகைய சிரஞ்ஜீவிகளில் ஒருவர், வாயு புத்திரனாகிய ஹனுமார். “ராமாயணம்’ என்ற இதிகாசத்தின் தலைவனும், தலைவியுமாக ராமபிரானும்- சீதா பிராட்டியும் இருக்கின்றனர். ஆனால் அனுமனே ராம காதையின் முக்கியப் புள்ளி எனலாம்.

மேலும் படிக்க... சொல்லின் செல்வன்…

தமிழகம் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

பண்ருட்டி, அக். 28: பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் இருளின் பிடியில் சிக்கியுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... தமிழகம் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் நவம்பர் 12-ல் கொடியேற்றம்

திருவண்ணாமலை, அக்.28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபப் பெருவிழா நவம்பர் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாயன்மார்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

மேலும் படிக்க... அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் நவம்பர் 12-ல் கொடியேற்றம்

குரு தட்சிணாமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா

காஞ்சிபுரம், அக். 21: காஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.கோயில் பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமாகும். இப்போது புனரமைக்கப்பட்டு இதன்…

மேலும் படிக்க... குரு தட்சிணாமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா

பரமன் நடந்து சென்ற பாதையில் ஒரு பயணம்

சில புராணங்களில் தெய்வங்களைத் தாழ்த்தியும், அறிவற்றவர்கள் போலச் சித்தரித்தும், மேலும் பல்வேறு விதமாகவும் பல கதைகள் உள்ளன. “தெய்வங்களே இப்படிச் செய்யலாமா?’ என்றிவற்றை இகழ்தல் கூடாது. மனிதர்களாகிய நாம், எப்படி இருக்க வேண்டும் – எப்படியெல்லாம் இருத்தல் கூடாது என்பதைக் காட்டுவதற்காக, ஒரே பரமாத்மா, பல்வேறு வடிவங்களை எடுத்து, நமக்கு நீதி உரைக்கின்றது. இவற்றை “திருவிளையாடல்கள்’ என்பர் ஞானியர். இங்கே கூறப்படப் போவதும் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்; ஆனாலும் இதன் பின்னணியில் உள்ள பரமேஸ்வரனின் பக்திப் பயணம், பலர் அறியாத விஷயமாக இருக்கலாம்.

மேலும் படிக்க... பரமன் நடந்து சென்ற பாதையில் ஒரு பயணம்

மாமலையாவது நீர் மலையே

இமயமலைக்கருகில் உள்ள திவ்யதேசங்களில் ஒன்று “வதரி’ எனப்படும் பத்ரி! நேபாள நாட்டின் அருகே உள்ளது சாளக்ராம திவ்ய தேசம்! ஆந்திரத்தில் இருக்கின்றது திருமலை! வடார்க்காட்டில் உள்ள சோளசிம்ஹபுரத்தை திருமங்கையாழ்வார் “கடிகைத் தடங்குன்று’ என்கிறார். இவையெல்லாமே நெடிதுயர்ந்த மலைச் சாரல்களில் உள்ள திவ்ய தேசங்கள். ஆனால், இவற்றோடு ஒப்பிடும்போது, அளவில் மிகச் சிறிய மலையை, “மாமலையாவது நீர் மலையே’ என்கிறார் அதே ஆழ்வார்.

மேலும் படிக்க... மாமலையாவது நீர் மலையே

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம்

தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது “பந்தணை நல்லூர்’. இப்போது “பந்தநல்லூர்’ என்று மருவியுள்ளது. இங்கு “பசுபதீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ளார். இவர் சுயம்புமூர்த்தி. அம்பாளின் திருநாமம், “வேணு புஜாம்பிகை’ என்பதாகும்.

மேலும் படிக்க... பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம்
error: Content is protected !!