தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-908" style="float: left; border: 3px solid black; margin: 3px;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/09/divyadesam_55_vijayasanar_varagunamangai.gif" align="left" width="180" height="148" /></p> <p>ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் வடகரையில் உள்ளது. நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதி. மூலவர் விஜயாசனப் பெருமாள். விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்கிறார். ஆதிசேஷன் குடைபிடிக்க, கிழக்கு நோக்கி, வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.</p> <p>தாயார்: வரகுணமங்கைத் தாயார், வரகுணவல்லித் தாயார். நம்மாழ்வார் தனது இடர்களை களைவதற்கு எம்பெருமானை வேண்டியபடி, எம்இடர்கடிவான் என அழைத்தார். எனவே, உற்ஸவருக்கு எம்இடர்கடிவான் எனப்பெயர்.</p> <p>தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி ஆகியவை. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம். ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிக அழகு. காளிங்கநர்த்தனர், தசாவதார சிற்பங்கள் கண்களைக் கவர்வன.</p>

தேவா நதிக்கரையில் இருந்த புண்ணியகோசம் என்ற அக்ரஹாரத்தில் வேதவித் என்ற அந்தணன் இருந்தான். அவன், தாய், தந்தை, குரு இவர்கள் மூவரையும் வழிபட்டு பணிவிடைகள் செய்து வந்தான். அதன்பிறகே தினமும் ஆசனமிட்டு பகவானை தியானம் செய்வான். இப்படியே சிறிது காலம் கழிந்தது. ஒருநாள், அவன் பகவானை எண்ணி தவம் செய்ய எண்ணினான். அவ்வாறு நினைத்தவுடன், பகவான் அந்தண ரூபத்தில் வரகுணமங்கை சென்று தவம் செய் என்று கூறினார். உடனே அவனும் தனக்கு வெற்றி அளிக்கும் முகமாக, அங்கு விஜயாசனர் என்ற திருநாமத்துடன் எழுந்தருள வேண்டும் என பிரார்த்தனை செய்தான். அவனது வேண்டுகோளை ஏற்றார் பெருமாள். எனவே இந்தத் தலத்தின் மூலவர் விஜயாசனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு தைலக் காப்பு மட்டும் நடைபெறுகிறது.

இங்கே, யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. மாசி மாத பிரம்மோற்ஸவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது நவகிரகங்களில் சந்திரனுக்குரிய தலம். எனவே, சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்று நலம் பெறலாம். இந்தப் பெருமானை வணங்கினால் எண்ணும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகள் கிட்டும்.

தலத்தின் பெயர் : ஸ்ரீ வரகுணமங்கை ( நத்தம் )

அம்சம் : சந்திரன்

மூலவர் : விஜயாசனர் என்ற பரமபதநாதன்

உற்ஸவர் : எம்இடர்கடிவான்

தாயார் : வரகுணமங்கை , வரகுணவல்லி

இருப்பிடம் : ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ.

நடை திறக்கும் நேரம் காலை 8-12 – மாலை 1-6

அர்ச்சகர் தொ.பே. எண்: கே. ராஜகோபாலன் 9486492279