தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

1 min read
<p><img class=" size-full wp-image-892" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/09/sudarsana_homam_sudarsana_yagna2.jpg" alt="" width="550" height="413" /></p> <p>சென்னை, செப்.5: சென்னை மந்தைவெளி அருகே ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் ஆவணி 18ம் நாள், செப்.4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீஸூக்த ஹோமம் ஆகியவை நடைபெற்றன.</p>

உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.

ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று யாகத்தில் கலந்துகொண்டு பகவத் தரிசனம் பெற்றனர். இந்த ஹோமத்தை ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியும் படங்களும்: குமரி.எஸ்.நீலகண்டன்