சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1 வரை நடை பெற்றது. விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், ஹோமங்கள் தொடக்கம், மந்த்ர புஷ்பம், மஹா ஹவின் நிவேதனம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்தப்பரஸாதம், ஸந்தர்பணை, மங்களா சாஸனம் ஆகியவை சிறப்பாக நடை பெற்றன. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று இறைவனின் தரிசனம் பெற்றனர். சீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்தும் இந்த சிறப்புமிக்க ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் இந்த வருடமும் மங்களகரமாய் நடைபெற்றது.

error: Content is protected !!