தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

நவகிரகக்கோட்டை சுயம்பு விநாயகர்

1 min read
<p><img class=" size-full wp-image-882" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/08/vellimani_navagrahakottai.jpg" alt="" width="409" height="458" /></p> <p>பழைமையான ஆலயங்கள் மட்டுமல்லாது தற்காலத்தில் நவீன ஆலயங்கள் பல விநாயகப் பெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்தில் பொன்னை அருகே உள்ள நவசித்தி சுயம்பு விநாயகர் கோவில் புகழ்பெற்று வருகிறது. வேலூரில்- வள்ளிமலை அருகே பொன்னை என்ற ஊருக்கு 2 கி.மீ தொலைவில் ஒட்டனேரி கிராமம் உள்ளது. இங்கே விநாயகர் சுயம்பு உருவாக எழுந்தருளியுள்ளார்.</p>

தற்போது நவீன வசதிகளுடன் பளபளக்கிறது இந்த ஆலயம்.

வேலுச்சாமி முதலியார் என்ற அன்பரின் சிறுவயதுக் கனவாக இருந்து, தற்போது பெரிய அளவில் எழுந்துள்ள ஆலயம் இது. அவரது பள்ளி மாணவப் பருவத்தில், ஒட்டனேரி கிராமத்தில் புளிய மரத்தருகே இருந்த சுயம்பு விநாயகர் விக்கிரகம் கவனிப்பாரற்றுக் கிடந்ததைக் கண்டு, விநாயகருக்கு கோயில் எழுப்ப எண்ணம் கொண்டார் அவர். அதுவே தற்போதுள்ள பிரமாண்ட ஆலயமாக உருப்பெற்றுள்ளது.

கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள நவசித்தி விநாயகர் சந்நிதியே முக்கிய சந்நிதி. கோயில் மண்டபத்தின் மேல்புறத்தில் விநாயகரின் 32 திருவுருவங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. கருவறையில் நவசித்தி விநாயகர் மூலவராக அருள்பாலிக்கிறார். அருகே இரண்டு சுயம்பு விநாயகர்கள்.

இது ராகு கேது úக்ஷத்திரம் என்பதால், நவகிரகங்கள் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் தென்புறம் தட்சிணாமூர்த்தி சந்நிதி. தென்மேற்கில் ரேணுகாம்பாள், மேற்புற பின்பகுதியில் திருப்பதி பெருமாள், வடமேற்கில் முருகப் பெருமான், வடக்கே துர்க்கை அம்மன், வடகிழக்கே நவக்கிரக சந்நிதி என மனத்துக்கு அமைதி தரும் சந்நிதிகள். இந்தக் கோயில் கோட்டை வடிவில் இருந்ததால், காஞ்சி சுவாமிகள் இதற்கு நவகிரகக் கோட்டை என்று பெயரிட்டார். தற்போதும் பக்தர்கள் இந்தப் பெயரிலேயே இந்தத் தலத்தை அழைக்கின்றனர்.

தகவல்: வெள்ளிமணி