தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

விநாயகரே போற்றி!

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-878" style="margin: 2px; float: left;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/08/vellimani_vinayaka.jpg" width="414" height="345" />விநாயகப் பெருமான் ஓங்கார வடிவானவர். அரச மரத்தடியில் அமர்ந்து, காட்சிக்கு எளியவராகத் திகழ்பவர். பிரார்த்திக்க நினைக்கும் அளவில், அதை நிறைவேற்றி அருள்பவர். வேண்டும் வரம் தரும் பெருமான். தேவரும் மூவரும் போற்றும் பிரான். சனீஸ்வரனே தன்னைப் பீடிக்க இயலாமற் செய்தவர். சனித்தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னங்களை... அதாவது தடைகளைக் களைபவர். அதனால் விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். கணங்களின் அதிபதி. அதனால் கணபதி, கணேசர் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார்.</p>

விநாயகரை வழிபடும் முறை:விநாயகரை ஒரு முறை வலம் வர வேண்டும். தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக் கரணம் போடுவது வழக்கம். ஜாதக ரீதியாக, கேது புக்தி கேது திசை உள்ளவர்கள் தினந்தோறும் விநாயகரைத் தவறாமல் வழிபட்டால் துன்பங்கள் குறைந்து, நன்மைகள் பெறலாம்.

விநாயகருக்கு உகந்தவை: விநாயகருக்கு அருகம்புல் மாலை மிக உகந்தது. வில்வ மாலை, எருக்கு மாலையும் சாத்தி வழிபடலாம். சதுர்த்தி அன்று மட்டும் துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்பர். ஜாதிப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால், ஞானம் பெருகும். அருகம்புல் அர்ச்சனையால் ஐசுவரியம் பெருகும். ஆரோக்கியம் வளரும்.

விநாயகருக்கு உகந்த பிரசாதங்கள்: அப்பம், பொரி, அவல், கொழுக்கட்டை, எள் உருண்டை, லட்டு.