தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஆடி அமாவாசையில் அகத்தியர் வழிபட்ட அய்யனார்!

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-874" style="float: left; margin: 3px;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/07/latestnews_sorimuththuaiyanar.jpg" width="300" height="200" />பார்வதி, பரமேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் வடதிசை சென்றனர். எனவே அத்திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இரு திசைகளையும் சமமாக்க அகத்திய முனிவரை தென் திசை அனுப்பினார் ஈசன். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களுக்கும் சென்றார். அப்படி வரும்போது, ஓரிடத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது ஞானதிருஷ்டியில் அவர் ஜோதி தரிசனம் கண்டார். லோக மாதாவான பிரம்ம ராட்சசி, பேச்சி முதலியோர் பரமேஸ்வரரை பூஜிக்கும் காட்சி கண்டு நெகிழ்ந்தார். அன்றைய தினம் ஆடி அமாவாசையாகும். ""இன்றைய தினம் புலால், மதுவைத் தவிர்த்து இம்மூர்த்திகளை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் அருள வேண்டும்'' என்று மலர் சொரிந்து வேண்டினார். அப்போது தேவர்களும் பூமாரி பொழிய, இறைவன் சொரிமுத்து அய்யனார் என்ற திருநாமம் பெற்றார்.</p>

கால வெள்ளத்தில் இந்த மூர்த்திகள் மண்மூடி மேடானது. காலம் கடந்தது. பாண்டிய நாட்டில் இருந்து பொதி மாட்டின் மூலமாக பொதிகை மலை வழியே வணிகர்கள் பண்டமாற்றம் செய்து வந்தனர். அப்போது ஒரு மாட்டின் பாதம் கல் ஒன்றில் இடிக்க, அதில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆச்சர்யமடைந்த வணிகர்கள் அந்தக் கல்லை நோக்கியபோது, “இங்கே அகத்தியர் ஞான திருஷ்டியில் கண்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர்’ என்று அசரீரி ஒலித்தது. அந்த வாக்கின்படி அவர்கள், சொரிமுத்து அய்யனார், மகாலிங்க சுவாமி, பிரம்மராட்சசி மற்றும் பரிவார தேவதைகளுக்குக் கோயில் எழுப்பினர்.

அகத்திய முனிவருக்கு சொரிமுத்து அய்யனாராகக் காட்சி அளித்தது ஆடி அமாவாசை தினம் என்பதால், சித்தர் அகத்தியரின் அருளைப் பெறவும், சொரிமுத்து அய்யனாரின் அருளை வேண்டியும் பக்தர்கள் ஆடி அமாவாசை தினத்தில் இங்கே குவிகிறார்கள்.

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே காரையாற்றில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். ஆண்டுதொறும் நடக்கும் ஆடி அமாவாசைத் திருவிழாவில் தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தாமிரபரணியில் நீராடி சொரிமுத்து அய்யனாரை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

அம்பை சா.ஷே

அய்யனாரும் ஆலங்குளமும்!

* நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களின் முக்கியத் தொழில் பீடிசுற்றுதல் மற்றும் விவசாயம். ஆண்டு முழுவதும் விடுமுறை இன்றி உழைப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள், தங்கள் குடும்பக் கோவில், ஊர்ப் பொதுக் கோவில் திருவிழாக்களுக்குக்கூட ஓய்வு எடுக்காமல் உழைப்பார்கள். ஆனால், சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசைத் திருவிழாவுக்கு மட்டும் 10 தினங்கள் கட்டாய ஓய்வை ஏற்படுத்திக் கொண்டு, கோவில் அருகே குடில் அமைத்து தங்கி சுவாமி தரிசனம் செய்வர்.

* பீடி சுற்றும் தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் சிறுசேமிப்பாக ஃபண்ட் எனப்படும் சீட்டு சேர்ப்பர். இதில் சேரும் பணம், ஃபண்ட் உறுப்பினர்களுக்குக் கடனாக வழங்கப்படும். இந்தப் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாய், ஆடி அமாவாசைத் திருவிழாவுக்கு பத்து தினங்களுக்கு முன்பாக, ஃபண்ட் உறுப்பினர்களுக்கு சமமாக பிரித்து அளிக்கப்படும். இந்தத் தொகையை, புத்தாடை எடுப்பதற்கும், கோவில் போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்வர்.

– ஆலங்குளம் ராமச்சந்திரன்

தகவல்: வெள்ளிமணி