தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

வேம்புலி அம்மனுக்கு தீ மிதி!

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-872" style="float: left; border: 2px solid black; margin: 4px;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/07/latestnews_vempuliamman.jpg" width="200" height="300" />தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா.</p> <p>குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.</p>

சென்னைக்கு அருகே உள்ளது நங்கைநல்லூர். இங்கே 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேம்புலி அம்மன் ஆலயம் உள்ளது. ஆதி தேவதையாய், கேட்ட வரங்களைத் தந்தருளும் இந்த அம்மன் சுயம்புவாகும். இதைத் தவிர அன்னையின் சுதை சிற்பமும், உற்ஸவத் திருமேனியும் கருவறையில் உள்ளன. வலம்புரி விநாயகர், வள்ளி – தெய்வானையோடு காட்சி தரும் முருகன், காத்தவராயன்- ஆர்யமாலா, நாகர், சப்த கன்னியர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்து அன்னையின் ஆலயத்தை மேலும் அழகுறச் செய்கின்றன. ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் நடக்கும் இந்தக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பௌர்ணமி பூஜை விசேஷமானது. பரம்பரை தர்மகர்த்தாக்களின் நிர்வாகத்தில் சிறப்பாக வழிபாட்டு முறைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடக்கவும், மழலைச் செல்வம் கிடைக்கவும் வேம்புலி அம்மனை பிரார்த்தனை செய்பவர்கள் ஏராளம்.

தற்போது, வேம்புலி அம்மன் ஆலயத்தில் 18ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா இன்று (29.7.2011)தொடங்குகிறது. கொடியேற்றம், காப்பு கட்டுதல், கரகம் வீதி உலா, கங்கை திரட்டல், அம்மன் வீதி உலா என்று சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 31ஆம் தேதி நடக்கும் தீ மிதித் திருவிழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 7ல் மகளிர் பங்கேற்கும் 108 பால்குட அபிஷேக விழா நடைபெறும். ஆடியில் அம்மன் அருளைப் பெற இவ்வாலயத்தில் வழிபடுவோம்.

தகவல்: வெள்ளிமணி