தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

பெரிய திருவடி ஜெயந்தி!

1 min read
<p><img class=" alignright size-full wp-image-857" style="float: right;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/07/latestnews_periyathiruvadi.jpg" alt="" width="270" height="253" /></p> <p>வருகிற 4.8.11ல் கருட பஞ்சமியும், 6.8.11ல் கருட ஜெயந்தியும் அமைகின்றன. காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார். சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாயன், சுவர்ணன், புன்னரசு என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு. இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார். கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.</p> <p>கருட பகவானின் தாயாரான வினதைக்கும், காசியப முனிவரின் மனைவியான கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.</p>

திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.

கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் “கருடத்வனி’ என்று ஒரு ராகமே அமைந்துள்ளதை இசை வல்லுநர்கள் அறிந்துள்ளனர். ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட úஸவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட úஸவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

திருக்கோயில்களில் பிரம்மோற்ஸவம், கஜேந்திர மோட்ச வைபவம், பெரியாழ்வாரின் அவதார நன்னாள் மற்றும் வைகுண்ட ஏகாதசியன்றும் கருட úஸவையில் பகவானை தரிசிக்கலாம். தை மாத அமாவாசையில் திருநாங்கூரில் 11 கருட úஸவை உற்ஸவத்தைக் கண்டு ஆனந்தம் அடையலாம். அதேபோல் ஆழ்வார் திருநகரியில், வைகாசியில், நம்மாழ்வாரின் அவதார நாளில் 9 கருட úஸவை உற்ஸவத்தைக் காணலாம். ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளின் ஆடிப்பூர உற்ஸவத்தில் 5 கருட úஸவையைக் கண்டு, மாலவனின் அருளும், பறவை அரசனின் அருளும் பெறலாம்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். “கருடத்வனி’ ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

தகவல்: வெள்ளிமணி