தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

நரசிம்மருக்கு நாற்பது பாசுரங்கள்!

1 min read
<p>108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருவாலி - திருநகரி என்கிற தலம். சீர்காழி- திருவெண்காடு- பூம்புகார் வழித்தடத்தில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.</p> <p>கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் தலம் லஷ்மிபுரம், ஸ்ரீநகரி, ஆலிங்கனபுரம், பில்வாரண்யக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் நரசிம்மர். இவர் லெஷ்மி நரசிம்மர், வேதராஜன், வயலாலி மணவாளன் என்ற திருநாமங்களாலும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருநாமம் அம்ருதவல்லித் தாயார்.</p>

பிரம்மாவின் ஐந்தாவது புதல்வனாக அவதரித்தவன் நிகன்சாமன் என்பவன். இவனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் எம்பெருமான் காட்சியளித்து அருள்புரிந்த தலம் இது.

திருமங்கையாழ்வார், திருவாலி எம்பெருமானை நாற்பது பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளார். குலசேகராழ்வாரும் இந்த எம்பெருமானுக்கு “பெருமாள் திருமொழி’யில் தாலாட்டுப் பாடியுள்ளார்.

திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லஷ்மிநரசிம்ம பெருமாளுக்கு இம்மாதம் 4ஆம் தேதி முதல் பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடந்து வருகிறது. 9 நாட்கள் நடக்கும் இந்த உற்சவ வைபவத்தில் நாமும் கலந்து கொண்டு திருமாலின் அருளைப் பெறுவோம்.