திருமலையில் ஹனுமன் ஜயந்தி

திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலில் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் முதலாவது வனப்பகுதி சாலையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் நண்பகல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இக் கோவிலுக்கு வருதற்காக பக்தர்களுக்கு இலவச பஸ் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் வனப்பகுதியில் உள்ள ஜாபாளி ஹனுமன் கோவிலில் ஜயந்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் சீதா ராமர், ஹனுமன் வேடங்களில் ராமர் பாடல்களை பாடியவாறு நடனமாடினர்.

error: Content is protected !!