தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

நாளை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

1 min read
<p>காஞ்சிபுரம், மே 19: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் யாளி வாகனத்தில் வீதியுலா வந்தார்.</p> <p>காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மே 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.</p>

இவ் விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை தங்க சப்பரத்திலும், வியாழக்கிழமை யாளி வாகனத்திலும் சுவாமி வீதியுலா வந்தார்.

இந்த ஊர்வலத்துக்கு முன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இவ் விழாவின் தேரோட்டம் மே 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மே 23-ம் தேதி தீர்த்தவாரியுடன் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் முடிவுறுகின்றன.