தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

1 min read
<p>சபரிமலை, மே 19: சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் வியாழக்கிழமை இரவு நிறைவு செய்யப்பட்டு, நடை அடைக்கப்பட்டது.</p> <p>சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்கு கடந்த 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மே 15-ம் தேதி முதல் பூஜைகள், நெய் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.</p>

நிறைவு நாளான வியாழக்கிழமை பகலில் ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் நடத்தி உச்சி காலப் பூஜை, வழிபாடு நடைபெற்றது. இரவு தந்திரி கண்டரரு ராஜீவரு படி பூஜை நடத்தி ஹரிவராஸனம் பாடி, வைகாசி மாதப் பூஜைகளை நிறைவு செய்தார். இத்துடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. இனி வைகாசி பிரதிஷ்டை தின விழாவுக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்