தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

திருமாலிருஞ்சோலை – அழகர்மலைக்கு கள்ளழகர் எழுந்தருளல்

1 min read
<p>[caption id="attachment_749" align="alignright" width=""]<img class=" alignright size-full wp-image-749" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/04/latestnews_azhagar1.jpg" alt="தசாவதார தரிசனத்தில்..." title="தசாவதார தரிசனம்" class="caption" align="right" width="550" height="325" />தசாவதார தரிசனம்[/caption]</p> <p>மதுரை, ஏப். 21: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், தசாவதாரம் நிறைவுற்ற நிலையில் வியாழக்கிழமை இன்று அழகர்மலைக்கு எழுந்தருள்கிறார்.</p> <p>ராமராயர் மண்டகப்படியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கிய சுந்தரராஜப் பெருமாளின் தசாவதார நிகழ்ச்சி, புதன்கிழமை காலை வரை நடைபெற்றது. முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராமர், கிருஷ்ணர், மோகன அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பெருமாள்.</p>

அங்கு திருமஞ்சனமாகி ராஜாங்க திருக்கோலத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், மதிச்சியம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதி மண்டகப்படிகளில் எழுந்தருளினார். கோரிப்பாளையம் திருக்கண் மண்டபங்களின் வழியாக வந்த பெருமாள், இரவில் தல்லாகுளம் ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புறப்படும் பெருமாள், அம்பலகாரர் மண்டபம், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், புதூர் மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் எழுந்தருள்கிறார்.

பின்னர் பகலில் மூன்றுமாவடியில் எழுந்தருளும் கள்ளழகரை, பக்தர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையடுத்து அவர் அழகர்மலைக்கு எழுந்தருள்கிறார்.