தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

கள்ளழகர் உடுத்திய பட்டின் நிறம்…

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-742" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/04/latestnews_madurai_azhagar.jpg" alt="பச்சைப் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சி தந்த கள்ளழகர்" style="float: left; margin: 4px;" width="100" height="140" />மதுரை, ஏப். 18: வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது அணிந்திருந்த பட்டின் நிறம் குறித்து பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பார். அப்போது அவரது கால், கை வெள்ளை நிற ஆடையால் மூடப்பட்டிருக்கும். அவர் அமர்ந்து சாய்ந்திருக்கும் பகுதி பச்சைப் பட்டால் சாத்தப்பட்டிருக்கும்.</p> <p>ஆகவே, கள்ளழகர் அமர்ந்து சாய்ந்த பகுதியில் சாத்தப்பட்டுள்ள பட்டின் நிறத்தையே இதுவரை அவர் உடுத்தியிருக்கும் பட்டாக மக்கள் கூறி வருகின்றனர். இதையே பச்சைப் பட்டு உடுத்தி வந்தார் என ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் வர்ணிக்கின்றன.</p>

இதனால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இதை நீக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அவரது கை, கால்களில் பச்சை பட்டாடை அணிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு அந்த முறை பின்பற்றப்படாததால், பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டதாக பட்டர்கள் கூறுகின்றனர். ஐதீகப்படி கள்ளழகர் கை, கால்களில் பச்சைப் பட்டை உடுத்தி வருவதுதான் சரியானது என்கின்றனர் பட்டர்கள்.

பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களைப் பரவசப் படுத்திய கள்ளழகர்இன்று தசாவதாரம்

மதுரை, ஏப். 18: மதுரை ராமராயர் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளழகர் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையும்,வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு 11 மணிக்கும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்தார் கள்ளழகர்.

திருவிழாவின் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வண்டியூர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் காலை 8 மணிக்கு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தருகிறார்.

இதனையடுத்து, அருள்மிகு அனுமார் கோயிலில் பிற்பகல் 2.30-க்கு எழுந்தருளியப் பிறகு இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்று சேர்கிறார். அங்கு விடிய விடிய தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

செய்தியை முழுமையாகப் படிக்க… : தினமணி