தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம்

1 min read
<p>சிதம்பரம், ஏப். 16: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் எழுத்தனர்.</p>

வைணவ ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமான ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் திகழ்கிறது. 3-வது அவதார ஸ்தலமாக அமையப் பெற்ற இந்த கோயில் உள்ள முஷ்ணம் தமிழக அரசின் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை 7-வது நாள் உற்சவமாக நகர வார்த்தக நல சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.

உற்சவ மூர்த்தியான யாக்கியவராகன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏப்ரல் 18-ம் தேதி மட்டையடி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.