தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

பழனி பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-576" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/02/latestnews_palani_murugan_temple.jpg" border="0" title="பழனி மலை" align="left" style="float: left; border: 1px solid black; margin: 4px;" width="300" height="213" />பழனி, பிப். 27: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 18-ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டமும். மார்ச் 19-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறுகிறது.</p>

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திரமும் முக்கியமான விழாக்களாகும். இதில் பங்குனி உத்திரத் திருவிழா, திருஆவினன்குடி கோயிலில் வரும் மார்ச் 13 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பாடு செய்து நான்கு கிரிவீதிகளில் உலா எழுந்தருள்கிறார்.

மார்ச் 18-ம் தேதி இரவு திருஆவினன்குடி கோயில் அருகே திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து வெள்ளித்தேர் உலாவும் விமரிசையாக நடை பெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் மார்ச் 19-ம் தேதி நடைபெறுகிறது