தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

தங்கவேல் முருகன் கோயிலில் சிவராத்திரி பூஜை

1 min read
<p />சென்னை, பிப். 26: சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 2-ம் தேதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

செங்குன்றம் அருகில் பழைய அலர்மாதி கிராமத்தில் உள்ள தங்கவேல் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. நான்கு காலங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யலாம்.

படப்பையை அடுத்த எழுச்சூரில் நல்லிணக்கேஸ்வரர் கோயிலில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.