தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

குடந்தை அருகே கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி

1 min read
<p />கும்பகோணம், பிப்.15: கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கட்டளை கிராமத்தில் கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பராமரிப்பின்றி பரிவார சன்னதிகள் முழுவதும் சிதிலமடைந்த நிலையில், தற்போது சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் மட்டுமே உள்ளன.<br />

இந்தக் கோயிலில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினரும், சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் உழவாரப் பணி மன்ற சிவனடியார்களும் இணைந்து கோயில் பிராகாரங்கள், நுழைவு வாயில், மண்டபம், விமானங்களில் செடி கொடிகள், முள்செடிகள் ஆகியவற்றை உழவாரப் பணியின் போது சுத்தம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.