தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

அரியலூரில் ஜன.24ல் மாங்காய் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

1 min read
<p />அரியலூர், ஜன. 22: அரியலூர் அருள்மிகு மாங்காய் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.<br /><br /> கும்பாபிஷேகத்தையொட்டிஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) காலை 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேசுவரர் வழிபாடுடன் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.<br />

மாலை 6.30 மணியளவில் விக்னேசுவரர் பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன. திங்கள்கிழமை காலை 5.45 மணியளவில் விக்னேசுவர பூஜை, புண்ணியாவாஜனம், நாடிசந்தானம், ஸபர்ஸôஹுதியுடன் இரண்டாம் கால யாக பூஜைகளும், தொடர்ந்து மகாபூர்ணாஹுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடும் நடைபெறுகின்றன.

காலை 10 மணிக்கு விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு வாணவேடிக்கை, விநாயகர் திருவீதியுலா நடைபெறுகிறது.