தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

1 min read
<p>இந்த வார ராசி பலன்கள் :: 2011 - அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை...(பன்னிரண்டு ராசிகளுக்கும்)</p>

http://www.dinamani.com/edition/astrology.aspx?starname=gemini

மிதுனம்:

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சிறப்பான வாரம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்துகொள்வார்கள். அவ்வப்போது சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படும். ஆனாலும் அதை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். அதனால் அலுவலகத்தில் எவரிடமும் வீண் பேச்சு வேண்டாம்.

வியாபாரிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். கவனத்துடன் இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம்.

விவசாயிகளுக்குத் தோட்டம், தோப்பு உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளும் சுமுகமாக முடியும். தானியப் பொருள்கள் விற்பனையில் லாபம் குவியும். விவசாயப் பணியாட்களை அனுசரித்துச் செல்லவும்.

அரசியல்வாதிகளுக்கு சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும்.

கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும்.

மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைக்கவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22,27

சந்திராஷ்டமம்: இல்லை.