தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

1 min read
<p>இந்த வார ராசி பலன்கள் :: 2011 - அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை...(பன்னிரண்டு ராசிகளுக்கும்)</p>

http://www.dinamani.com/edition/astrology.aspx?starname=Taurus

ரிஷபம்:

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். கையிலுள்ள பொருட்களை இழக்க நேரிடும். உடல் ஆரோக்யத்தில் சில பிரச்னைகள் உண்டாகும். மற்றபடி ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். வேலைகளில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வாக்கு கொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்துகொள்ள வேண்டியது அவசியம். சிலருக்கு வேலை மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். போட்டியாளர்களின் சதியை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

விவசாயிகள் உற்பத்திப் பொருட்களால் நல்ல பலனை அடைவீர்கள். அதோடு கால்நடைகளின் மூலம் விவசாயத்தைப் பெருக்க இது சாதகமான வாரம்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். முக்கியமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளால் மனதில் மகிழ்ச்சி பெருகும்.

மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றியடைவீர்கள். பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பரிகாரம்: சனிக் கிழமையன்று சனி பகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 23,24

சந்திராஷ்டமம்: இல்லை..