தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

1 min read
<h1 style="text-align: center;"><a href="index.php?option=com_content&view=article&id=338:2011----&catid=95:2010-12-26-03-59-30&Itemid=236" target="_blank">2011 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்</a></h1> <p>ஆங்கிலப் புத்தாண்டான 2011ஆம் வருடம்,​​ விசாக நட்சத்திரம்,​​ 4ஆம் பாதம்,​​ விருச்சிக ராசி,​​ கன்னி லக்னத்தில் பிறக்கிறது. ​​ ​ ​ ​ இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ சனிக் கிழமையன்று,​​ பிரதோஷ தினத்தில் பிறக்கிறது.​ அன்று 'சனிப் பிரதோஷம்' என்பது கூடுதல் சிறப்பு.​ பரமேஸ்வரன் விஷம் அருந்திய நாள் சனிக் கிழமை.​ அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது திரயோதசி நாளாகும்.​ இரண்டும் சேர்ந்து வருவதுதான் 'சனி மகா பிரதோஷம்.'</p>

சனிக் கிழமையன்று செய்யும் மகா பிரதோஷ தரிசனத்தால் 5 வருடங்கள் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும்.​ அடுத்தடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை அனுசரித்தால் ‘அர்த்தநாரி’ பிரதோஷமாகும்.​ இதனால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.​ திருமணத் தடைகள் விலகும்;​ தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.​ பிரதோஷ தினத்தன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்தால் சிவன் -​ ​ ​ பார்வதியுடன் முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும்.​ இதனை ‘ஸ்கந்த பிரதோஷம்’ என்று கூறுவார்கள். ​ ​ ‘விஷம்’​​ என்பது பிறவித் துன்பம்.​ பிரதோஷ தரிசனத்தால் அத்துன்பம் நீங்கும்.​ அதுவும் மிகுந்த சிறப்புடைய சனி பிரதோஷ தினத்தில் தோன்றும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ வாசகர்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.​ இனி ராசி வாரியாக புத்தாண்டு வருடப் பலன்களைக் காண்போம்.