தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

குருபெயர்ச்சி பலன்கள் 2010

1 min read
<h1 style="text-align: center;"><img class=" size-full wp-image-398" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2010/12/gurupeyarchi_gurupeyarchi.gif" border="0" width="500" height="83" /></h1> <h1 style="text-align: center;"><strong>குருபெயர்ச்சி பலன்கள் 2010 - 2011</strong></h1> <p>குரு பகவான் இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு கால புருஷ ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து கால புருஷ ராசிக்கு அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானமாகிய "மீன' ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 5 மாதம் சஞ்சரிக்கும் குரு பகவான், "கர' வருடம், சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.5.2011), ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 02.14 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.</p>

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

கும்பம்

குரு பகவான் உங்களின் ஜன்ம ராசியான கும்ப ராசியிலிருந்து தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆகாரத்தைக்கூட சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாதபடி கடினமாக உழைப்பீர்கள். அந்த உழைப்புக்குத் தகுந்த பண வரவும் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வீண் சண்டை சச்சரவுகள் மறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரம் சீராக இருப்பதால் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  கர்வத்தை விட்டொழித்துவிட்டு அனைவரிடமும் சகஜமாகப் பழகி உங்களின் நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்வீர்கள்.

குருபகவான் தன் ஐந்தாம் பார்வையால் உங்களின் ருண (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தான ராசியைப் பார்வை செய்வதால் உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். சிக்கல் ஏற்படும் என்று ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைக்கூட புதிய மெருகுடன் செய்து முடிப்பீர்கள். சந்தேகப்படாமல் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை தடங்கலின்றிக் கிடைத்துவிடும். சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் அகலக் கால் வைப்பது ஆகாதென்பதை அறியவும்.

குரு பகவான் ஏழாம் பார்வையினால் உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்துள்ள சனி பகவானையும் பார்வை செய்கிறார். இதனால் இறங்குமுகமாக இருந்த வருமானம் ஏறத் தொடங்கும். மனக் கசப்புடன் இருந்த சகோதர, சகோதரிகள் நட்புக்கரம் நீட்டுவார்கள். “தோற்றுவிடுவோம்’ என்று நினைத்திருந்த வழக்குகள் திடீரென்று உங்களுக்குச் சாதகமாக திசை மாறும். இருப்பினும் முன்பின் யோசிக்காமல் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

குரு பகவான் தன் ஒன்பதாம் பார்வையினால் உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்களின் தகுதிக்கு மீறிய பதவிகள் உங்களைத் தேடி வர வாய்ப்புண்டு. உங்கள் காரியங்களைப் பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள்.

மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிப் புகழடைவீர்கள். சிலருக்கு உபரி வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; விருது பெரும் யோகமும் உண்டாகும். இந்த குருப் பெயர்ச்சிக் காலத்தில் சமுதாயத்தில் உங்கள் புகழும், செல்வாக்கும் பல மடங்காக உயரும்.

உத்யோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். ஊதிய உயர்வு கிடைப்பதில் ஏற்பட்ட தடை நீங்கும். அதேநேரம் உடலில் சோர்வு ஏற்பட்டு  சுறுசுறுப்பு குறையும். தினமும் “நடைப் பயிற்சி’ செய்து, சோர்வை விரட்டி அடியுங்கள்.

வியாபாரிகள் சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்களைத் தேடிப் பல வகையிலும் வருமானம் வரும். பழைய கடன்கள் வசூலாகும். அதேசமயம் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். போட்டி, பொறாமைகள் கூடுதலாக இருப்பதால் எச்சரிக்கை தேவை.

விவசாயிகளுக்குக் கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உழைப்புக்கேற்ற பலனை அடைவதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதி வெற்றி உங்களுக்கே!

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். இதனால் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும்.  எதிர்கட்சியினரிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்களை செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். ஆயினும் வருமானம் சீராக இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி உங்களின் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகள், இத்தனைக் காலம் வாட்டிய விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை நாடி வரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யத்திற்காக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும்.

பரிகாரம்: கணேசரை வழிபடவும். முடிந்தவரை “சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்’பாராயணம் செய்து வரவும்.