தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

கோபி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

1 min read
<p>கோபி, நவ. 19: கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 19) கும்பாபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை விநாயகர் பூஜை, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, முதல்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p>

வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=334033