தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா

1 min read
<p />காஞ்சிபுரம்,  நவ. 18:  காஞ்சிபுரம் அருள்மிகு ஓணேசுவரர் ஆலய குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஓணேசுவரர் கோயில். இக் கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. மறுநாள் மகா கணபதி வேள்வி, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வேள்விகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து கோபுர விமானங்கள் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இதைத் தொடர்ந்து ஆன்றோர் அருளுரை நிகழ்ச்சிகள், அன்னதானம் முதலியன வழங்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இக் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர். இக் குடமுழுக்கு விழாவையொட்டி மாலை சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.