தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் 201 பால்குடம் சிறப்பு அபிஷேகம்

1 min read
<p />காஞ்சிபுரம், நவ. 17: ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரண புஷ்கலை சமேத ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் 201 பால்குட அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பால்குட ஊர்வலத்துக்கு பாண்டுரங்க குருசாமி தலைமை தாங்கினார். கே.சங்கரசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சஞ்சீவி ராஜா சுவாமிகள் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் க.விஜயன், ஸ்ரீநாராயண சேவாஸ்ரமம் தலைவர் சுவாமி சத்ரூபானந்தா, வி.ஜீவானந்தம், எம்.முனுசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பால்குட ஊர்வலம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ராஜவீதி வழியாக ஸ்ரீ நகரீஸ்வர் கோயிலை அடைந்து அங்கு ஐய்யப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்கோயிலுக்கு தேவையான அபிஷேகப் பொருள்களை வழங்கினர்.

http://dinamani.com/edition/Story.aspx?artid=333457