தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் நவம்பர் 12-ல் கொடியேற்றம்

1 min read
<p /><span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1" />திருவண்ணாமலை, அக்.28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபப் பெருவிழா நவம்பர் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாயன்மார்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

இதில் மிக முக்கியமானதாக கார்த்திகை தீப விழா கருதப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவின்போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளன.