தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

குணசீலம் ​ பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்

1 min read
<p />திருச்சி மாவட்டம்,​​ முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரமோத்சவம் வெள்ளிக்கிழமை ​(அக்.​ 8) முதல் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

11 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்சவ விழாவில் நாள்தோறும் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.

அக்.​ 8,9,10 ஆகிய தேதிகள் தவிர மற்ற நாள்களில் இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறைச் சேவை நடைபெறுகிறது.​ அக்.​ 12,13,14 ஆகிய தேதிகளில் மூலவர் முத்தங்கி சேவையும்,​​ மற்ற நாள்களில் தங்கக் கவசச் சேவையும் நடைபெறுகிறது.

பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் அக்.​ 17-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.​ அன்று மாலை 5 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பிரம்மோத்சவம் நிகழ்ச்சிகள்​ www.gun​aseel​amtemple.com என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

News at:: http://www.dinamani.com