தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

1 min read
<p />திருவாரூர், அக். 8: திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. புராதனமானதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இவ் விழா திருவாரூர் கு. செல்வகணபதி குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கியது. மயிலாடுதுறை பேராசிரியை சாந்தி சோமசுந்தரம் சகலகலாவல்லி மாலை பாடினார்.

இதைத்தொடர்ந்து, தினந்தோறும் மாலை 7 மணியளவில் சிறப்பு சொற்பொழிவு, இசைச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் விவரம்:

சனிக்கிழமை நால்வர் நெறி என்ற தலைப்பில் மயிலாடுதுறை பேராசிரியர் இரா. மருதநாயகம், அக். 10-ம் தேதி பெண்மையின் பெருமை என்ற தலைப்பில் தஞ்சை பேராசிரியை மல்லிகா ஆகியோரது சொற்பொழிவு.

அக். 11-ம் தேதி இசையும், பக்தியும் என்ற தலைப்பில் நன்னிலம் புலவர் க. ஞானசேகரன் வழங்கும் இசைச் சொற்பொழிவு. அக். 12-ம் தேதி இந்துமத அற்புதங்கள் என்ற தலைப்பில் சன்னாநல்லூர் பூவை முருகன், அக். 13-ம் தேதி இலக்கியமும் பக்தியும் என்ற தலைப்பில் ஜீவா பழனிவேல், அக். 14-ம் தேதி மகளிர் போற்றும் பக்தி என்ற தலைப்பில் நாகை புலவர் வேம்பு, அக். 15-ம் தேதி சேக்கிழார் காட்டும் செம்மை நெறி என்ற தலைப்பில் மயிலாடுதுறை செல்வக்குமார், அக். 16-ம் தேதி சித்தர்களின் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேவக்கோட்டை நாகை நாகராஜன் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். 

அக். 17-ம் தேதி புலவர் மு. விவேகானந்தன் தலைமையில் மகேஸ்வரி, ஹரிகிருஷ்ணன் பங்கேற்கும் பக்தி வழக்காடு மன்றம், அக். 18-ம் தேதி திருவாரூர் ஆர். சிவாஜி குழுவினரின் பக்திப் பாமாலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.