தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

துக்ளக் ‘சோ’வின் சந்தர்ப்பவாதம்

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-340" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2010/09/cho-ramaswamy.jpg" border="0" width="132" height="150" style="border: 1px solid black; float: left; margin: 4px;" />துக்ளக் சோ தன்னை ப்ராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், காவலராகவும் கருதிக்கொண்டு தன் மனம் போன வழியில் பலவிதமாக ப்ரசாரங்களை செய்து வருகிறார். சமீப காலமாக அவரது கருத்துக்கள் பற்றி சில புகார்கள் விமர்சனங்கள் பத்திரிகை வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் எழுந்துள்ளன. இவர் அத்வைதி. நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பவர். இவருக்கு வைணவர்கள் தரித்துக்கொள்ளும் ஊர்த்தவ புண்ட்ரம் (திருமண் - நாமம்) கேலிக்குரியது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம். நாமம் ஏமாற்றப்படுதலின் சின்னம் என்று நையாண்டி செய்வது அவருக்கு கைவந்த கலை.</p>

சமீபத்தில் துக்ளக் 28.8.2010 இதழில் வெளிவந்த விஷயம் பலரை வியப்பில் ஆழ்த்தியது

…….. நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் – அதாவது பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் ஆகிய வர்ணங்களைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. இது மனுதர்மத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.

நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்றும் மனுதர்மம் சொல்லியிருக்கிறது. ஆனால், மற்ற எல்லா கலைகளும் கணிதம், விஞ்ஞானம், ஓவியம், வர்த்தகம், பலவிதமான கைத்தொழில்கள் போன்ற எதுவாக இருந்தாலும், எல்லோருமே படிக்கலாம். அதற்குத் தடை எதுவுமே கிடையாது. மனுதர்மத்தில் அந்த மாதிரி ஒரு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஒன்று. பிராமணன் அந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ளலாமே தவிர, அந்தத் தொழிலுக்கு எல்லாம் போகக் கூடாது. அதே சமயத்தில், மற்ற மூன்று வர்ணத்தினரும் அந்தத் தொழிலைச் செய்யலாம். அதற்காக அந்தக் கல்விகளையும் கற்கலாம்.

நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று சொன்னாலும், அதிலும் ஒரு முரண்பாடு வரும். ஏனென்றால், மனுதர்மத்திலேயே ஒரு விதி வருகிறது.

ஒரு பிரம்மசாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால், நான்காவது வர்ணத்தைச் சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த பிரம்மச்சாரி வேதத்தைக் கற்கலாம். இப்படி மனுதர்மம் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறது. அப்படியென்றால், நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேதங்கள் தெரிந்திருந் தால்தானே, அதைக் கற்பிக்க முடியும்! ஆகையால், அவர் வேதத்தை நன்கு கற்றிருக்க வேண்டும். அதற்கு அதிகாரம் இருந்திருக்கிறது.

அது மட்டுமல்ல. நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவரிடம் ஒரு பிரம்மச்சாரி வேதங்களைக் கற்கிறபோது, அந்தப் பிராமண பையன் – பிரம்மச்சாரி – வேதங்களைக் கற்றுத் தரும் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்த குருவிற்கு சகல மரியாதைகளையும் செய்தாக வேண்டும். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவருக்கு கீழ்படிந்து நடந்து, வேதம் கற்க வேண்டும்.

இவ்வாறு மநுநீதியில் கூறப்பட்டதான விஷயங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. நான்காவது வர்ணத்தை சார்ந்தவர்கள் வேதங்களை படிக்கக்கூடாது. மநுதர்மத்திலேயே (வேறு) ஒரு விதி வருகிறது. ஒரு பிரம்மசாரிக்கு சரியான குரு கிடைக்கவில்லை என்றால் நான்காவது வர்ணத்தை சார்ந்த ஒருவரிடம் சென்று அந்த ப்ரம்மசாரி வேதத்தை கற்கலாம். ஆகையால் நான்காவது வர்ணத்தினர் வேதத்தை கற்றிருக்க அதிகாரம் இருந்திருக்கிறது. இப்படி ஒரு முரணான விதி துக்ளக் ஆசிரியருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. நான்காவது வர்ணத்தினர் வேதத்தை பயிலக்கூடாது என்பதில் எந்தவிதமான மாறுபாடான கருத்திற்கும் இடமில்லை. மநு கூறப்பட்டதான ஒரு விதி துக்ளக் கில் சுட்டிக் காட்டப்பட்டது. முற்றிலும் தவறானது. கற்பனையானது. ஆசிரியர் ஏதோ ஒரு போலி சாஸ்திரிகளிடமிருந்து தகவலை பெற்றிருக்கக்கூடும். இவர் மேற்கோள் காட்டிய விதி அபத்தமாக இருக்கிறது. வேதம் கற்றுக் கொள்ள முன்வரும் ப்ரம்மசாரி தனக்கு வேதம் கற்றுத்தரவிருக்கும் குரு சரியானவர் தானா என்பதை அவனால் தீர்மானிக்க முடியுமா? ஒரு ப்ரம்மசாரி வேதம் கற்றுக் கொள்ள நல்ல குருவை தேடுகிறான். முதல் வர்ணத்தை சார்ந்த ப்ராமணர்களில் யாரும் தேறவில்லை.

வேறு வழியின்றி அவன் நான்காவது வர்ணத்தை சார்ந்தவரும், வேதத்தில் நல்ல பாண்டியத்தை உடைய நாலாவது வர்ணத்தை சார்ந்த ஒரு உத்தம அதிகாரி (!)யை தேர்ந்தெடுத்து அவரிடம் வேதம் கற்றுக்கொள்ள மநுநீதி அநுமதிக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை இன்றைய நாட்களிலேயே உருவாக வாய்ப்பில்லாத போது அன்றையநாட்களில்அத்தகையமுயற்சிக்குஅவஸியமிருந்திருக்குமா? கோவிலில் பூஜை செய்வதற்கு அர்ச்சகர், குருக்கள், வைதீக கார்யத்தை நடத்தி வைக்க புரோகிதர் விஷயத்தில் சமயங்களில் தட்டுப்பாடு நேர்வது உண்டு. ஆனால் பாடசாலைகளில் அவ்வாறான நிலை இல்லை. முன்பு வேத அத்யயனத்திற்கு தட்டுபாடு இருந்ததாக எந்த தகவலுமில்லை. பிரம்மசாரி விஷயத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தீர்வு காண்பதற்காக நான்காவது வர்ணத்தை சார்ந்தவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள் என்று காரணம் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இப்படி ஒரு விதிமுறை வடிகட்டின கற்பனையே.

துக்ளக் ஆசிரியர் ஏன் இப்படி ஒரு அபத்தமான வாதத்தை முன்வைக்க துணிந்தார்? அவருடைய பத்திரிகையின் விற்பனை வாரந்தோறும் சில லக்ஷங்கள் தேறும். நமது சமுதாயத்தில் அந்தணர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் தான். துக்ளக் வாசகர்களில் பிராமணரல்லாதவர்கள் பெரும்பான்மையினரே. அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்கு இப்படியெல்லாம் விஷயத்தைத் திரித்து ஆசிரியர் கட்டுரை வரைகிறார். அவர் உணர்த்துவது – நான்காவது வர்ணத்தினர்களும் வேதத்தை கற்றுக்கொள்வதற்கு மநு அநுமதித்திருக்கிறார். மநுவின் இல்லாத ஒரு பரந்த மனப்பான்மைக்கு இப்படி ஒரு விளம்பரம்! அரசியல்வாதிகளிடம் காணப்படும் சந்தர்ப்பவாதம் இந்த புரட்சி அந்தணனிடமும் (!) காணப்படுவது வேதனைக்குரியது. தனக்கு இடைஞ்சல்களை தோற்றுவிக்கும் கண்டனக்கடிதங்களை அவர் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடுவது கிடையாது.

– ஆதிப்பிரான் ஸ்ரீனிவாசன்